2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்றில் கடைகள் உடைப்பு: இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று -அம்பாறை வீதி வம்மியடி சந்தியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான இரு சந்தேக நபர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி உத்தரவிட்டார்.

இச்சந்தேக நபர்களில் ஒருவர்  நேற்று வியாழக்கிழமையும் மற்றைய நபர் நேற்று முன்தினம் புதன்கிழமையும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேற்படி  ஏழு விற்பனை நிலையங்களின் பூட்டுகள்; ஞாயிற்றுக்கிழமை (03) இரவு உடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இரண்டு வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த பணத்தை மாத்திரமே திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்படி சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X