2025 மே 19, திங்கட்கிழமை

அக்கரைப்பற்றிலுள்ள வீடொன்றில் தீ

Suganthini Ratnam   / 2016 ஜூலை 06 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,நடராஜன் ஹரன்

அம்பாறை, அக்கரைப்பற்று 7ஆம் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இன்று புதன்கிழமை அதிகாலை திடீரென்று தீ பரவியதன் காரணமாக அவ்வீட்டின் ஒரு பகுதியும் கூரையும் தீக்கிரையாகியுள்ளன.

அத்துடன், வீட்டில் காணப்பட்ட தளபாடங்களும் முக்கிய ஆவணங்களும் தீயில் எரிவடைந்துள்ளதாக தம்மிடம் அவ்வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி வீட்டில் உள்ளவர்கள் உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த தீ பரவியுள்ளது. குறித்த வீட்டில் தீ பரவியதைக் கண்ட அயலவர்கள், வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினருக்கும் வீட்டு உரிமையாளர் அறிவித்ததைத் தொடர்ந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த தீ விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X