Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, சுலைமான் றாபி
அம்பாறை, கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில், நிந்தவூர் - அட்டப்பள்ளம் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட விபத்துச் சம்பவமொன்றில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் - பாணமை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியும், அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தினசரி பத்திரிகை விநியோகம் செய்யும் கெண்டர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான இரு வாகனங்களினதும் சாரதிகள் இருவரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதில் காயமுற்ற பயணிகள் சிலர், கல்முனை மற்றும் நிந்தவூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகன சாரதிகளின் கவனயீனத்தினாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவித்த சம்மாந்துறைப் பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago