2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு 343 ஆசிரியர் பயிலுனர்கள்

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

2016ஃ2017ஆம் கல்வியாண்டுக்கான இரண்டு வருட ஆசிரியர் பயிற்சிக்காக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு 343 பயிலுநர் ஆசிரியர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக அக்கலாசாலை அதிபர் ஏ.சி.எம்.சுபைர், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் ஆசிரிய கல்வித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக பயிலுநர் ஆசிரியர்கள் 292 பேருக்கான பதிவு நடவடிக்கை இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.  இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் தபாலில் அனுப்பப்பட்டுள்ளன.

ஆங்கிலப் பாடத்துக்கு 92 பேரும் ஆரம்பக்கல்விக்கு  85 பேரும் கணிதப் பாடத்துக்கு 36 பேரும் விஞ்ஞானப் பாடத்துக்கு 32 பேரும் இஸ்லாம் பாடத்துக்கு 09 பேரும் உடற்கல்விப் பாடத்துக்கு  38 பேருமாக மொத்தம் 292 பேர் முதற்கட்டமாக பதிவு செய்யப்படவுள்ளனர்.

ஏனைய 51 பயிலுநர் ஆசிரியர்களின் இப்பயிற்சிக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், மாகாண சபையின் விடுவிப்புக் கடிதம் கிடைக்காமையால், அவர்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விடுவிப்புக் கடிதம் கிடைத்தும் இவர்களுக்கான பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பான விவரங்களைப் பெற விரும்புவோர் முகாமைத்துவ உதவியாளருடன் 077 -0622323 என்ற அலைபேசி இலக்கத்துடன் காரியாலய நேரத்தில் தொடர்புகொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X