Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நவீன ஆய்வுகூடம், பற்சிகிச்சைப்பிரிவு மற்றும் கதிரியக்கப்பிரிவை ஏற்படுத்தித் தருமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை தள ஆயுர்;வேத வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. இவ்வைத்தியசாலையில் ஆய்வுகூடம், பற்சிகிச்சைப்பிரிவு, கதிரியக்கப்பிரிவு என்பன இல்லாமையினால்; நோயாளர்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே, இவ்வைத்தியசாலையில் காணப்படும் இத்தேவைப்பாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்திசெய்து தருமாறு கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு புதன்கிழமை (16) கடிதம் அனுப்பப்பட்டதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியசர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago