2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச சபை புதிய செயலாளர் நியமனம்

Gavitha   / 2015 நவம்பர் 06 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை புலேந்திரன், நேற்று வியாழக்கிழமை (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராகக் கடமையாற்றிய சித்திக் ஒய்வு பெற்றுச் சென்றமையால், கடந்த ஐந்து மாதங்களாக பதில் செயலாளராக எஸ்.எம்.கலீல் றகுமான் கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் கணபதிப்பிள்ளை புலேந்திரன் கல்முனை மாநகர சபையில் கடமையாற்றி வந்தார். துறைநீலாவனைணைச் சேர்ந்த இவர் அரசாங்க துறையில்  கடந்த 32 வருடங்களாக கடமையாற்றி வருகின்றார்.

மக்களுக்கு சேவையாற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள புதிய செயலாளர் கே.புலேந்திரனுக்கு பிரதேச பையின் உத்தியோகத்தர்கள் வரவேற்பளித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X