2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Sudharshini   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல். அப்துல் அஸீஸ்

கல்முனை தொகுதிக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (04) கல்முனை இருதயநாதர் வரவேற்ப்பு  மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டம்;  கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்றதுடன் இதில் கல்முனை தொகுதிக்குட்பட்ட  உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைதிட்டங்கள், சுகாதார வேலைதிட்டங்கள், கல்விதொடர்பான வேலைதிட்டங்;கள், பாதுகாப்பு தொடர்பன வேலைதிட்டங்கள் தொடர்பில்;  ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

கல்முனை தொகுதி அபிவிருத்தி குழுத்தலைவரும்  விளையாட்டு துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தலைமையில் இடம்பெற்ற  இவ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ரி.கலையரசன் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் , அரசாங்க உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .