Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,ஒலுமுதீன் கியாஸ்
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி நிருவாகத்தினூடாக பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக ஆசியா பவுண்டேசன் நிறுவனத்துடன் கலந்துரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களங்களின் மூலம் மூன்று மாவட்டங்களின் மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள் ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்வதற்காக இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதலமைச்சரின் செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபாலகுமார் தம்பி,பிரதிப் பணிப்பாளர் ஏ. சுபாகரன், மாகாண சபை உறுப்பினர் எம். ஜவாத், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சமந்த அபேவிக்கிரம உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகள், போக்குவரத்து சேவைகள், விளையாட்டுதுறை, கைத்தொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு, இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு அபிவிருத்தி முன்னெடுப்புகள் சம்பந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டி காட்டியதற்கு அமைவாக இவ்வாறான துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு ஆசியா பவுண்டேசன் முன்வந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago