2025 மே 05, திங்கட்கிழமை

அம்பாறையில் மின் துண்டிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஜனவரி 31 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவசரத் திருத்த வேலை காரணமாக, அம்பாறை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, அம்பாறை பிராந்திய மின் பொறியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பல்குடா வீதி, திருகோவில் பகுதிகளில் நாளை மறுதினம் (02) காலை 8.30 மணி முதல் மாலை 4.30 வரையும் மின் தடைப்படும்.

வீரகொட மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட 26ஆம் கொலனி, வலகம்புர-2 ஆகிய பகுதிகளிலும், மஹாஓயா, இங்கினியாகல, தெகியத்தகண்டிய ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட கீரவான, பதியத்தலாவ, மடவலலலந்த, தெகியத்தக்கண்டிய நகரம் ஆகிய பகுதிகளிலும் நாளைக் காலை 8.30 மணி முதல் மாலை 5 வரையும் மின் தடைப்படும்.

எதிர்வரும் 5ஆம் திகதி, பொத்துவில், அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பொத்துவில் நகரம், கோமாரி, 40ஆம் கட்டைகோமாரி, 2ஆம் கட்டை, வாங்காமம், அலிகம்பே பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5 வரையும் மின் தடைப்படும்.

6ஆம் திகதி, இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட ஹிங்குரான பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 வரையிலும், அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பல்குடா வீதி, திருகோவில் பகுதிகளில் காலை 8.45 மணி முதல் மாலை 4.30 வரையும் மின் தடைப்படும்.

07ஆம் திகதி, பொத்துவில், இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட லகுகல, அம்பகஹவெல, லாகுகல, குலானுகெ, மஹாகலுகொல்ல பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5 வரையும் மின் தடைப்படும்.

8ஆம் திகதி, வீரகொட மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட குமாரிகம, மத்தியமுகாம் ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5 வரையும் மின் தடைப்படுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X