Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
எதிர்வரும் 2016ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேவையின் நிமித்தம் கருதி அம்பாறை மாவட்டத்திலுள்ள நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கு நீதவான்கள், நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மேலதிக நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய டீ.சீ.கே. பெரேரா, ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதிமன்ற நீதவானாகவும், பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய ஐ.பி. றஸாக், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவானாகவும், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய எச்.எம்.எம். பஸீல், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவானாகவும், கல்முனை நீதவான் நீதமன்ற நீதவானாக கடமையாற்றிய ஏ. யூட்சன், மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதவானாகவும், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய ரீ. கருணாகரன், மல்லாகம் மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதவானாகவும், கல்முனை மாவட்ட நீதவானாக கடமையாற்றிய எம்.பி. முகைதீன், மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவானாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அம்பாறை மேலதிக நீதிமன்ற நீதவானாக திருமதி கே.பி.ஆர். லக்மினியும், பொத்துவில் நீதவான் நிதிமன்ற நீதவானாக எம்.ஐ. வாஹாப்தீனும், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானாக திருமதி என். கந்தசாமியும், கல்முனை நீதவான் நீதமன்ற நீதவானாக ஐ.பி. றஸாக்கும், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவானாக எச்.எம்.எம். பஸீலும், கல்முனை மாவட்ட நீதவானாக வி. ராமக்கமலனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago
1 hours ago