Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 03 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வானது 'நிலையான எதிர்காலத்துக்கு வலுவான பெண்கள்' என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 8ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்தார்.
அம்பாறை வீரசிங்கம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வின்போது, தெரிவு செய்யப்பட்ட சுயதொழில் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும், பெண்களின்; சுகாதார மேம்பாடு கருதி எதிர்வரும் 6ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 4 வரை அம்பாறை நகரசபை அலுவலகக் கட்டடத்தில் விசேட மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்மருத்துவ முகாமில் கருப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்றவற்றைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். இதில் பெண்களைக் கலந்துகொண்டு பயனடையுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
31 minute ago
57 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
5 hours ago