Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டதில் தொடர்ந்து பெய்து வந்த அடைமழை இன்று வியாழக்கிழமை ஓய்ந்துள்ளதனால் தாழ்நில குடியிருப்பு பிரதேசங்கள் மற்றும் உள்வீதிகளில் தேங்கிக் கிடந்து வெள்ள நீர் வடிந்து வருவதுடன் மக்களின் அன்றாட வாழ்க்கையும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குப் பொறுப்பான சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அன்வர் இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த சில தினங்களாக பெய்து வந்த அடை மழையினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.கடந்த சில தினங்களாக பெய்து வந்த அடைமழை தற்போது சற்று தனிந்து வருவதனால் தேங்கி நின்ற வெள்ள நீர் வடிந்து செல்லுகின்றது.
மேலும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை முகத்துவாரங்கள் ஊடாக நீர் வேகமாக வடிந்து கடலில் செல்வதனால் வெள்ள அபாயம் நிலை நீங்கி வருகின்றது.
இதேவேளை, அடைமழை தொடருமாயின் அதற்கான முன் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பாதுகாப்பு பிரிவு தயாராகவுள்ளதுடன் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago