2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அம்பாறையில் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுமக்களை விழிப்புணர்வூட்டும்  இறுதிநாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறையில் நடைபெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு நிறைவேற்று உத்தியோகத்தர் என்.சசிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அம்பாறை நகர போக்குவரத்து பொலிஸார்,செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அனர்த்தங்கள் மற்றும் திடீர் விபத்துக்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது தொடர்பாக வீதியோர நாடங்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டன.

இதேவேளை,பொதுமக்களுக்கு முதலுதவி சம்பந்தமாக விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களும்  செஞ்சிலுவைச் சங்க தொண்டர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X