2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அரசியல்வாதிகளின் தேவையற்ற தலையீடுகளை தடுக்கவும்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

அம்பாறை, அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட மத்திய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கையில் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலரின் தேவையற்ற தலையீடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும் இதைத் தடுத்து நிறுத்துமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று மத்தியகுழுத் தலைவர் எம்.எம்.எம்.நிஸாம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற ஆளுநருடனான சந்திப்பின்போதே, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தேவையில்லாமல் தங்களின் சொந்த அரசியல் காரணங்கள் மற்றும்; தங்களுக்கு  வேண்டியவர்களுக்காகவும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றுதல், ஆரம்பப்பிரிவுப் பாடசாலைகளை இரண்டாம் தரப் பாடசாலைகளாக மாற்ற முயற்சித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளினால் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கல்வி அடைவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாமென்று கல்விச் சமூகம் கவலை அடைந்துள்ளதாகவும் எம்.எம்.எம.நிஸாம் கூறினார்.

இது தொடர்பான மகஜரையும் ஆளுநரிடம் அவர் கையளித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், 'கல்வி நடவடிக்கையில்; தேவையற்ற அரசியல் தலையீடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X