2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் கலைப்பிரிவு ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் அமைந்துள்ள பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயம் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் கடந்த வருடம் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வித்தியாலயத்தில் இந்த வருடம் உயர்தரத்தில் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வித்தியாலயம் கட்டமைப்பு வகை 1 சீ என்று வகைப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வகையில், கிழக்கு மாகண கல்வித் திணைக்கள கட்டமைப்புக் குழுவின் சிபாரிசுக்கமைய அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் கலைப்பிரிவை ஆரம்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாக அவ்வித்தியாலயத்தின் அதிபர் கே.எல்.உவைத்துள்ளா, இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுவரைகாலமும் இவ்வித்தியாலயம் க.பொ.த.சாதாரணதரம் வரையே இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X