Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 13 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு, நாடு பூராகவும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை முதல்; எதிர்வரும் 18ஆம் திகதி வரை, அங்கத்துவ வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்தல், வட்டார மட்டத்தில் கிளைகளை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் பிரதேச மற்றும் மாவட்ட மத்திய குழுக்களும் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிப் புனரமைப்பு, இளைஞர் மற்றும் கல்வி விவகாரம் என்பவற்றுக்கு பொறுப்பாளரான கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் மேற்பார்வையின் கீழ் தொகுதி மற்றும் பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் இந்த அங்கத்துவ வாரம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீத், கல்முனைத் தொகுதியில் முன்னாள் மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், சம்மாந்துறை தொகுதியில் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அங்கத்துவ வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
அங்கத்துவ வார நிகழ்வுகளின் இறுதியாக பிரதேச மற்றும் மாவட்ட மத்திய குழுக்களுக்கான நிர்வாகிகள் தெரிவு, கட்சித்
தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னிலையில் இடம்பெறவுள்ளன.
இதேவேளை கட்சியின் அம்பாறை மாவட்டத்துக்கான பிரதான ஒருங்கிணைப்பு காரியாலயமாக சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் அமைந்துள்ள கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் அலுவலகம் செயற்படும் எனவும் பிரதேச அமைப்பாளர்கள் அனைவரும் அந்த மாவட்ட ஒருங்கிணைப்பு காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு அங்கத்துவ வாரம் மற்றும் கட்சிப் புனரமைப்பு தொடர்பான மேலதிக விபரங்களையும் தேவையான ஆலோசனைகளையும் பெற்றுகொள்ள முடியும் என அறிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .