2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அ.இ.ம.கா.விலிருந்து உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் சிலர் விலகல்

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

]

எம்.எஸ்.எம். ஹனீபா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அக்கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவருமான கலாநிதி எம்.ஏ.சீ.முகம்மது றியாஸ், அக்கட்சியின் சகல பதவிகள் மற்றும் செயற்பாடுகளிலுமிருந்தும் விலகிக்கொண்டு தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்கவை வியாழக்கிழமை (05) கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்பே தனது ஆதரவாளர்கள் சகிதம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

இதன்போது வன்னிமாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானும் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X