2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆங்கில தினப்போட்டி

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 12 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில தினப் போட்டி எதிர்வரும் 21ஆம் 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக வலயக் கல்வி அலுவலக ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம்.அபுல் ஹஸன்,  இன்று  செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஆண்டு 10 தொடக்கம் 13ஆம் ஆண்டு வரையான மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் 21ஆம்; திகதி அக்கரைப்பற்று ஆயிஷா பெண்கள் கல்லூரியிலும் ஆண்டு 03 தொடக்கம் 09ஆம் ஆண்டு மாணவர்களின் போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் 23ஆம் திகதி அக்கரைப்பற்று ஆண்கள் கல்லூரியிலும் நடைபெறவுள்ளன.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய மூன்று கோட்டக் கல்வி அலுவலகங்களிலிருந்து 35 பாடசாலை மாணவர்கள் இப்போட்டியில் பங்குபற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X