Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மே 03 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
'கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகள் இருக்குமாயின், எதிர்வரும் 06ஆம் திகதி வரை மேன்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்' என்று மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இவ்வாண்டுக்கான ஆசிரியர் இடமாற்றம் ஏப்ரல் 25ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனினும் சிலர் இன்னும் புதிய பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (02) கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்கள் முதலில் தமக்கான புதிய பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும். அதன் பின்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும்' என்றும் அவர் கூறினார்.
'இதற்காக எதிர்வரும் 06ஆம் திகதி வரை வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களின் நலன்களில் கவனம் செலுத்தும் ஆசிரியர் சங்கங்களும் அரசியல்வாதிகளும் மாணவர்களின் நலன்களிலும் அக்கறை காட்ட வேண்டும்' என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
'ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்களும் எம்மவர்களே' என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago