Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 30 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களுக்கான சம்பள மாற்ற நிலுவையை வழங்குவதற்காக 365 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது. இருப்பினும், அம்மாகாணத்திலுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உரிய தகவல்களை தமக்கு அனுப்பாமையால் அந்நிலுவையை உடனடியாக வழங்க முடியாதுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'இலங்கை ஆசிரியர் சேவையின் புதிய சேவைப் பிரமாணக் குறிப்புக்கமைய உள்ளீர்ப்பு செய்யப்பட்டமை காரணமாக வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுக்கமைவாக வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைக்காகவே பெருந்தொகை நிதி ஒரே தடவையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எமது மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதம கணக்காளரின் முயற்சியே காரணமாகும்' என்றார்.
'எவ்வாறாயினும், தங்களின் வலயங்களிலுள்ள ஆசிரியர்களின் சரியான நிலுவை விவரங்களை மாகாண கல்வித் திணைக்களத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அனுப்பாமையால், அந்நிதியை வலயங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் அதன் ஊடாக ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது.
வலய ரீதியாக ஒவ்வொரு ஆசிரியரின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், செலுத்தப்பட வேண்டிய சம்பள நிலுவை போன்ற விவரங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உடனடியாக அனுப்பும் பட்சத்தில், அவை எமக்கு கிடைத்து ஒரு மணி நேரத்தில் அந்தந்த வலயத்துக்கான நிதியை எம்மால் வழங்க முடியும். அதனைத் தொடர்ந்து குறித்த ஆசிரியர்கள் வலயக் கல்விப் பணிமனையில் தங்களின் சம்பள நிலுவையை பெற முடியும்' என்றார்.
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago
9 hours ago