2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஆசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறை

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலக பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை எதிர்வரும் 08ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் அக்கரைப்பற்று அஸ்-ஸாஹிரா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ.எம். அபுல் ஹஸன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தரம் 07ஆம் மற்றும் 11ஆம் ஆண்டுக்கான ஆங்கிலப் பாடத்தின் பாடத்திட்டத்தில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதால், இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலேயே இப்பயிற்சி பட்டறை நடைபெறவுள்ளதாகவும் இதில் அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளிலிருந்து ஆங்கிலம் கற்பிக்கும் 60 ஆசிரியர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .