Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Sudharshini / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
ஆசிரியர்களை நம்பியே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கின்றார்கள். அது மாத்திரமல்லாமல் மாணவர்கள் அதிகமான நேரங்களை வீட்டில் செலவிடுவதைவிட பாடசாலைகளிலும் வகுப்புக்களிலும்தான் செலவிடுகின்றார்கள். அந்தளவு கல்வி செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தியவர்களாகவும் அதிக அக்கரை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர் என நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
அம்பாறை, நிந்தவூரில் இஸ்லாமிய நெறிமுறைகளோடு இயங்கிவரும் CRC முன்பள்ளியின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வும் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வும் நேற்று மாலை (04) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நிந்தவூர் CRC முன்பள்ளி பாடசாலையானது இஸ்லாமிய நெறி முறைகளுடன் கூடிய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதிமான அக்கறை செலுத்திவருவதையும் இச்சிறுவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் யாவும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக இடம்பெற்றிருந்ததையும் இங்கு அவதானிக்க முடிந்தது. இன்றைய காலகட்டத்தில் நாம் பார்ப்போமாயின் அவர்கள் ஒரு வித்தியாசமான முறையில் இஸ்லாமிய நெறி முறைகளையும் அதன் கட்டுப்பாடுகளையும் மீறிச் செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இந்நிலைமையில், இன்றைய காலத்திலுள்ள சிறுவர்களை ஒரு இஸ்லாமிய நெறி முறைகளுடன் கூடிய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்தி , அவர்களின் வாழ்க்கை முறையினை இஸ்லாமிய கட்டுக்கோப்போடு எடுத்துச்செல்லும் கல்வி முறைமையும் இங்கு கற்பித்துகொடுக்கப்பட்டுள்ளது. இதை சகல பெற்றோர்களும் இன்றைய நிகழ்வுகளின் மூலம் அவதானித்திருப்பார்கள் அதுமாத்திரமல்லாமல் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்றவாறு இங்கு கல்வி நடவடிக்கைகள் யாவும் அமைந்துள்ளது' என்றார்.
நிந்தவூர் தௌஹீத் ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும் ஆசிரியருமான மௌலவி எம்.எச்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் ஐ.எம்.பாயிஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் விருதுகளையும் வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
55 minute ago
1 hours ago