2025 மே 22, வியாழக்கிழமை

ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 31 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தின் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாட்டை கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு, மத்திய கல்வி அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தர்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தின்; அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கஷ்டப் பிரதேசங்களில் நீண்டகாலமாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. இந்த வெற்றிடங்களுக்கு கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தி அடைந்தவர்களை நியமிப்பதற்கான விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

'அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்;, இறக்காமம் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளிலும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், குச்சவெளி, ஈச்சிலம்பற்று ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு, செங்கலடி, ஏறாவூர்ப்பற்று, கிரான் கஷ்டப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளிலும்;  ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினையைத் நிரந்தரமாக தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X