2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆடை விற்பனை நிலையம் தீப்பிடிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 30 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை நகரில் ஆடை விற்பனை நிலையம் ஒன்று தீப்பிடித்து இருந்துள்ளது. இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீப்பிடித்து சில நிமிடங்களில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் பாரிய இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபும் ஸ்தலத்துக்கு விரைந்திருந்தார்.

இத்தீவிபத்து காரணமாக குறித்த ஆடை விற்பனை நிலையம் பகுதியளவிலேயே எரிந்துள்ள போதிலும் தீச்சூட்டினால் அங்கிருந்த ஆடைகள் யாவும் நாசமடைந்துள்ளன. 

தீவிபத்துக்கான காரணம் மின் ஒழுக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேவேளை, கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .