2025 மே 19, திங்கட்கிழமை

ஆட்கடத்தலில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 03 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.பேரின்பராஜா, இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.

அத்துடன், இச்சந்தேக நபரை  15ஆம் திகதிக்குள் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டவர்கள் கடந்த மாதம் காலி துறைமுகத்தில் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து காலி  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இச்சந்தேக நபரை பொலிஸார் தேடி வந்தனர்.

இவர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து,  அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் சனிக்கிழமை (02) மாலை இச்சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X