2025 மே 03, சனிக்கிழமை

ஆடை விற்பனை நிலையத்தில் தீ

Princiya Dixci   / 2017 ஜனவரி 28 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை- கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில், நேற்று (27) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆடைகள் எரிந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை 05ஆம் பிரிவில் அமைந்துள்ள இவ் ஆடை விற்பனை நிலையம், அபுசாலி முகம்மட் நப்றாஸ் என்பவருக்கு சொந்தமானதாகும்.

மின் ஒழுக்கினால் தீ பிடித்து எரிந்துள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X