Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
நிந்தவூர் பிரதேசத்தில் புனரமைக்கப்பட்ட கொங்றீட் வீதிகளில் தேசிய நீர் விநியோக வடிகாலமைப்பு சபையின் திருத்தவேலைகளுக்காக விதீயில் அமைக்கப்பட்ட ஆள்புலம், வீதியிலிருந்து சுமார் ஒரு அடி உயரத்தில் இருப்பதால் போக்குவரத்து செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரவு வேலையில், இவ்வீதியினுடாக செல்வதென்பது பெரும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த நீர் குழாய்களின் ஆள்புலங்கள் அமைந்துள்ளன.இவ்வீதிகள்,முறையான திட்டமிடலின்றி புனரமைக்கப்பட்டிருப்பதை இதன் மூலம் அறியமுடிகின்றது.
எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பாக குடி நீர் விநியோக வடிகாலமைப்பு சபையிடம் வினவியபோது,
இவ்வீதிகள் புனரமைப்பதற்கு முன்னரே வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்;கு இவ்வீதிகளிலுள்ள ஆள்புலங்களை சரிசெய்து வீதியின் மட்டத்துக்கு சமமாக அமைப்பதற்கு தேசிய குடிநீர் விநியோக வடிகாலமைப்பு சபையினால் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.மேலும், அதற்குரிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago