Editorial / 2019 ஒக்டோபர் 13 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.ஏ.றமீஸ், ஐ.ஏ.ஸிறாஜ்
அட்டாளைச்சேனையில் நேற்று (12) நடைபெறவிருந்த அம்பாறை மாவட்ட நில உரிமைக்கான பொறுப்புக் கூறல், ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வை, பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பதட்டமான சூழ்நிலையொன்று தோன்றியது.
நாடாளுமன்ற உறுப்பினா் பைசா் முஸ்தபா, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினா் ஆரிப் சம்சுதீன் உள்ளிட்டோர், இந்நிகழ்வு தொடர்பில் பொலிஸாரிடம் எடுத்துக் கூறிய போதும் அது வெற்றியளிக்கவில்லை. இதனையடுத்து, பாதையோரம் தரையில் அமா்ந்து தமது எதிர்பை அவர்கள் வெளிக்காட்டினர்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள இத்தருணத்தில், அரசியல் தலைவர்கள், 500க்கும் மேற்பட்ட காணி உரிமையாளர்கள் கலந்துகொள்ளவிருந்த இந்நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர்கள் சார்பான வாக்குறுதிகள் வழங்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுமிடத்து, அது தேர்தல் சட்டத்துக்கு முரணானதாக அமையும் என்பதால், அம்பாறை மாவட்டத் தேர்தல் அலுவலகத்தின் பணிப்புரைக்கமைய, பொலிஸாரால் இது தடுத்துநிறுத்தப்பட்டதாக, தேர்தல் முறைப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

17 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago