2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆயுர்வேத கருத்தரங்கும் கண்காட்சியும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திலுள்ள பாரம்பரிய வைத்தியர்களுக்கு கிழக்கு மாகாண ஆயுர்வேத கருத்தரங்கும் கண்காட்சியும், கல்முனை பிரதேச செயலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (19) இடம்பெறவுள்ளதாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தெரிவித்தார்.

'கிழக்கு மாகாண ஆயுர்வேத கருத்தரங்கும் கண்காட்சியும் - 2016' என்ற கருப்பொருளில் இது தொர்பான விளக்கங்களுடன் கூடிய கருத்தரங்கு, குறித்த பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நாளை காலை 09 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது.

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் இக்கருத்தரங்கிலும் கண்காட்சியிலும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் பிரதேசத்தின் சமூக வைத்திய அதிகாரியான வைத்தியர் எம்.ஜே.எம்.ஹஸானினால் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X