2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆயுள்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு நிதி

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 27 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு கீழுள்ள பாண்டிருப்பு, நற்;பிட்டிமுனை மற்றும் நீலாவணைப் பகுதிகளிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபாய் வழங்குவதற்கான அமைச்சரவைத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் பதில் முதலமைச்சருமான ஏ.எல்.எம்.நஸீர்  தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றபோது, மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் தனிநபர் பிரரேணையை சமர்ப்பித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த வைத்தியசாலைகள் தொடர்பில் 2015ஆம் ஆண்டு அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது. இந்த வைத்தியசாலைகளை நிரந்தரமாக அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அறிக்கையை சுகாதார அமைச்சுக்கு வழங்கி வைக்குமாறு  கல்முனை பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்; கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X