Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அக்கரைப்பற்று எக்பண்ட் அமைப்பின் ஏற்பாட்டில் சமூகப்பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுக் கருத்தரங்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லும் சந்தூக் மற்றும் ஜனாசா குளிப்பாட்டுவதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ரீ.எப்.சி.ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் உறுப்பினரும் பிரதிக்கல்விப்பணிப்பாளருமான ஏ.எஸ்.முகம்மது கியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதலாம் கட்டமாக பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளான யாசகர்களினால் ஏற்பட்டுள்ள சமூகப் பிரச்சினைகள், அதற்கான காரணம் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டன.
இதேவேளை, ஜனாஸாக்களை பிரதான வீதியூடாக கொண்டு செல்லும் போது பயணிகளுக்கு தடையேற்படாதவாறு மேற்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் சமூகத்தில் உயர் பதவிகளை அடைந்து சிகரம் தொட்டவர்களை பாராட்டுதல், அவர்களை இளைய சமூகத்தினருக்கு அறிமுகம் செய்தல் போன்ற விடயங்கள் பற்றி கருத்துரை வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
6 hours ago