2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆய்வு கூடம் சார்ந்த பயிற்சிகள்

Thipaan   / 2016 ஜனவரி 09 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்தர பாடசாலை விஞ்ஞான பிரிவு மாணவிகள், தமது ஆய்வு கூடம் சார்ந்த பயிற்சிகளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சம்மாந்துறை வளாகத்தில் உள்ள ஆய்வு கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

சமீபத்தில் அல்- முனீறா பெண்கள் உயர் தர பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விஞ்ஞான பிரிவு மாணவிகள் தங்களுக்கு குறைவாக இருக்கும் ஆய்வு கூடம் சம்மந்தமான பயிற்சிகள் மற்றும் செயன்முறை பயிற்சிகள் என்பவை தொடர்பாக இங்கு கற்றுக் கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் கலாநிதி ஏ.எல்.ஹனீஸ் தலைமையில்இடம்பெற்ற இப் பயிற்சி செயலமர்வில், ஆசிரியர் எம்.ஆர்.சியாஹூர் ரஹ்மான் மற்றும் ஆசிரியை ஏ.எல்.சிபானா ஆகியோர் உட்பட 18 மாணவிகள் தங்களது ஆய்வுகூடம் சார்ந்த பயிற்சிகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X