2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் கைகலப்பு ஒருவர் காயம்

Niroshini   / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறைஇ பொத்துவில் பிரதேசத்தில் இன்று (23) காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் 06ஆம் பிரிவைச் சேர்ந்த யூஸுப் முகைதீன் (வயது 32) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

பொத்துவில் ஹிதாயா புரம் மற்றும் பசறிச்சேனை ஆகிய பிரதேசங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையினால் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என எதிர்ப்பு தெரிவித்து பொத்துவில் ஜும்மாப் பள்ளிவால் பிராதான வீதியில் அப்பகுதிமக்களால் இன்று (23) காலை 9 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதுஇஇவ்வார்ப்பாட்டத்தை தடை செய்ய முற்பட்ட ஒரு குழுவினருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியதிலேயே குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X