Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீத்தை, ஒலுவில், பள்ளக்காடு மற்றும் களியோடை ஆகிய பிரதேச ஆற்றில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 06 நபர்களில் மூவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாயும் மற்றுமொருவருக்கு 30 ஆயிரம் ரூபாயும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம். பஸீல் இன்று திங்கட்கிழமை அபராதம் விதித்துள்ளார்.
சனிக்கிழமை (19) மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து உழவு இயந்திரத்தில் ஆற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த ஆறு நபர்களையும் கைது செய்ததுடன் மண்ணுடன் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
27 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
27 minute ago
59 minute ago
2 hours ago