2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆலம்குளம் வைத்தியப் பராமரிப்பு பிரிவிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, ஆலம்குளம் ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு பிரிவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரிடம் அக்கிராம மக்கள் மகஜரொன்றைக் கையளித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கும் ஆலம்குளம் கிராம மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல், அட்டாளைச்சேனையிலுள்ள சுகாதார அமைச்சரின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு பிரிவில் வைத்தியர், தாதியர், சிற்றூழியர், காவலாளி ஆகியோருக்கான  பற்றாக்குறை நிலவுவதுடன், இப்பிரிவுக்கான நிரந்தர கட்டட வசதியின்மையும் உள்ளது. எனவே, இந்த ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு பிரிவுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரிடம் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலங்குளம் கிராமத்தில் வாழ்கின்ற 350 குடும்பங்களைச் சேர்ந்த 1,500 பேருடன் அயலிலுள்ள சம்புநகர் கிராம மக்களும் தங்களின் வைத்திய சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆலம்குளம் ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு பிரிவுக்கே வருவதாகவும் இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், 'ஆலம்குளம் ஆரம்ப வைத்தியப் பராமரிப்பு பிரிவுக்குத் தேவையான ஆளணிப் பற்றாக்குறை உட்பட ஏனைய வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X