Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 22 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
கதிர்காமத்துக்கான பாதயாத்திரை மேற்கொள்பவர்கள் இந்துமத கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிந்து செல்லுமாறு ஆலையடிவேம்பு பிரதேச இந்து மா மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, ஆலையடிவேம்பு பிரதேச இந்து மா மன்ற தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெற்றது. இதன்போதே அகில இலங்கை இந்து மா மன்ற பிரதித் தலைவரும் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மா மன்றத் தலைவருமான வே.சந்திரசேகரம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'புனிதமான பாதயாத்திரையில் நவீன உடைகளை அடியார்கள் அணிவதை தவிர்த்து, எமது சமய நெறிமுறைக்கும் ஒழுக்கத்துக்கும் ஏற்புடைய ஆடைகளை மட்டும் அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' என்றார்.
'மேலும், கதிர்காமத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்பவர்கள் இந்துசமய கலாசார ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். இவை மனத்தூய்மையை ஏற்படுத்தி இறை பக்தியை நிலை பெறச் செய்யும்.
'எமது இந்துமதத்தில் ஆன்மிக தல யாத்திரையானது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. எமது முன்னோர்கள் சமயநெறிமுறைகளை கடைப்பிடித்து காவி உடை அணிந்து, கழுத்தில் உருத்திராட்ச மாலையும் நெற்றியில் விபூதி பூசியும் எமது பாரம்பரியத்தை பேணி வந்தனர். இப்பாதயாத்திரை செல்லும் வனவழியானது சித்தர்களும் முனிவர்களும் தவசிகளும் வாழ்ந்த பகுதியாக உள்ளது. இன்றும் தவக்கோலத்தில் முனிவர்கள் எம்மை ஆசிர்வதிக்கின்றனர். இவ்வாறான வனவழியில் செல்லும் ஒவ்வொரு அடியாரும்; மனத்தூய்மையுடன் இறை நாமத்தை மனதில் நிறுத்தி செல்வது ஆன்மிக ஈடேற்றத்தை மிக இலகுவாக எமக்குத் தரவல்லது' எனவும் அவர் மேலும் கூறினார்.
எதிர்வரும் ஜு{லை மாதம் ஐந்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள கதிர்காம ஆடிவேல் விழா, 21ஆம் திகதி தீர்த்தத்துடன் நிறைவடையவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .