Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டத்தில் மூவினங்களினதும் பங்களிப்புடன் சிரமாதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கஷ்டப் பிரதேசங்களிலுள்ள வணக்கஸ்தலங்கள், பொது இடங்களில் இச்சிரமாதானப் பணிகள், பொதுமக்களின் பங்களிப்புடன் இடம்பெற்றுகின்றன.
இதன் முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே. ஆதம்லெப்பை தலைமையில், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சங்கமான் கிராமத்தில் இன்று (06) நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் க.பேரின்பராசா, உப தவிசாளர் விக்டர் ஜெகன், ஸ்ரீசித்தி விநாயகர் ஆலையத்தின் தலைவர் நேசராஜா ரஜனிகாந்த, செயலாளர் து.கமலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
2 hours ago
3 hours ago