2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரத்த சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2016 மே 17 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி, மூன்று வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் பைஸால் காசிம் நேற்று (17) தெரிவித்தார்.

இதுதொடர்;பாக பிரதியமைச்சர் பைஸால் காசிம் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேங்களில் அதிகமான சிறுநீரக நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்;. இச்சிறுநீரக நோயாளர்கள் கண்டி, மட்டக்களப்பு, அம்பாறை வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டிய நிலைமை தோன்றிளயுள்ளது.

இதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு கூடுதலான பணத்தையும் செலவுசெய்து வருகின்றனர்.

இந்த விடயம் எனது கவனத்துக்கு  கொண்டு வரப்பட்டதையடுத்து, சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு வசதியை கரையோரப் பிரதேச வைத்தியசாலைகளிலும் ஏற்படுத்த ஆவன செய்துள்ளேன்' என்றார்.

'குறிப்பாக பொத்துவில், சம்மாந்துறை, நிந்தவூர் வைத்தியசாலைகளுக்கு இரு படுக்கைகளுடன் கூடிய குறித்த இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை விரைவில் வழங்கவும் நடவடிக்ககைகளை மேற்கொண்டுள்ளேன்;. எமது பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளின் சேவைகளை மக்களுக்கு மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நான் முன்னெடுத்து வருகின்றேன்.

'அந்த வகையில் சிறுநீரக நோயாளர்;களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேதோடு, மிக விரைவில் குறித்த வைத்தியசாலைகளில் இந்நிலையங்கள் திறந்து வைக்கப்படும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X