2025 மே 15, வியாழக்கிழமை

இரு வேறு பகுதிகளில் வெடிபொருள்கள் மீட்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் இம்மாதம் 20ஆம் திகதியன்று,  காணியொன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு, விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கசெய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் யுத்த காலங்களில்  உபயோகிக்கப்பட்ட வெடிபொருளின் பகுதியொன்று, விமானப் படையினரால் நேற்று முன்தினம் (23) மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி வெடிபொருளை ஆராய்ந்து, உரிய அனுமதியை பெற்று செயழிலக்கம் செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .