2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

இறக்காமம் வைத்தியசாலைக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 09 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இறக்காமம்  பிரதேச வைத்தியசாலையின்  அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

வைத்தியசாலை விடுதியின் திருத்த வேலைக்கும் குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம்  ஆகியவற்றின் கொள்வனவுக்குமாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இவ்வைத்தியசாலையில் புதிய நோயாளர் விடுதிக் கட்டடங்களை நிர்மாணித்து, பௌதீக வளங்களை ஏற்படுத்திக்கொடுத்து, சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X