2025 ஜூலை 16, புதன்கிழமை

இறக்காமம் வைத்தியசாலைக்கு நோயாளர் விடுதிகள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 50 நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான சகல வசதிகளுடனும் கூடிய ஆண், பெண் விடுதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் இணைப்புச் செயலாளர் ஜெமில் காரியப்பர் தெரிவித்தார்.

மத்திய அரசின் உதவியுடன்  03 கோடி ரூபாய் நிதியில் இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் அபிவிருத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.  

இந்த வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுதற்கான போதிய வசதிகள் இல்லாமல், நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனைப் போக்கும் வகையில் நோயாளர் விடுதிகள் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்க சுகாதார அமைச்சின் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களைக் கொண்ட குழுவினர், மேற்படி வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை காலை சென்று,  நோயாளர் விடுதிகளை அமைப்பதற்கான இடங்களையும் பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X