2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

இலங்கை கல்வி நிர்வாக சேவை நாடளாவிய சேவையாக கணிக்கப்படாமைக்கு கண்டனம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாண பிரதம செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள பதவிநிலை உத்தியோகத்தர்களின் செயலாற்றுகை மதிப்பிடுதல் தொடர்பான சுற்றறிக்கையில், இலங்கை கல்வி நிர்வாக சேவை நாடளாவிய சேவையாக கணிக்கப்படாமை குறித்து கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண தொழிற்சங்கம் புதன்கிழமை(6) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

'கிழக்கு மாகாண பிரதம செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இலங்கை நிர்வாக சேவை, கணக்காளர் சேவை, திட்டமிடல் சேவை, பொறியியல் சேவை என்பன மாத்திரமே நாடளாவிய சேவைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும் நாடளாவிய சேவையை சேர்ந்தவர்கள் என்பதை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் குறிப்பிடத் தவறியதன் மூலம் இச்சேவையின் மகத்துவத்தை அவர் குறைத்து மதிப்பிட்டுள்ளார் என்பதை நாம் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாடளாவிய சேவையாக ஒன்பது சேவைகளை, அரச சேவைகள ஆணைக்குழு பிரகடனப்படுத்தியுள்ளது. இவற்றுள் இலங்கை கல்வி நிர்வாக சேவையும் ஒன்றாகும் என்பதை கிழக்கு மாகாண நிர்வாகம் அறியவில்லையா?' என அச்சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X