2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

இலங்கை - துருக்கி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக ஹக்கீம் தெரிவு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

இலங்கை - துருக்கி நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (15)  நடைபெற்ற இலங்கை - துருக்கி நாடாளுமன்ற நட்புறச் சங்கக் கூட்டத்திலேயே அமைச்சர் ஹக்கீம் அதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 

இந்நிகழ்வில் இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் டுங்கா ஒட்சுஹாதர் உரையாற்றுகையில், துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்ட கால தொடர்பு பற்றி விளக்கிக்கூறியதுடன், இலங்கையர்கள், துருக்கிய விசாவுக்கு இணையத்தினூடாக விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

தம்மை தலைவராக செய்தமைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம், உதுமானிய பேரரசின் கீழ் துருக்கி இஸ்லாமிய உலகில் வகித்த செல்வாக்கை சிலாகித்துக் கூறியதோடு, நவீன தொழில்நுட்பத்துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்துள்ள அந்நாட்டின் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தோடு முக்கிய உடன்படிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகக் குறிப்பிட்டார்.

பிரதித்தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மற்றும் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன ஆகியோரும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X