Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு
இலங்கையின் கல்வித்துறையில் திறன் அபிவிருத்தியின்மையே தொழில் வாய்ப்புக்கள் இன்மைக்கான பிரதான காரணமென பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம்.எம். முஸாரத், இன்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.
உலக கனேடிய பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் (வூஸ்க்) அனுசரணையுடன் அறுகம்பை உல்லாசத்துறை அமைப்பினால் கிழக்கு மாகாண உல்லாசத்துறை போரம் அமைப்பிற்கான நிகழ்வு, அறுகம்பை பே மிஸ்றா ஹோட்டலில் இன்று (15) நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலை வாய்ப்யை பெற்றுக்கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்ற இக்கால கட்டத்தில் உல்லாசத்துறையில் முறையான பயிற்சிகைளை வழங்கி தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திவரும் வூஸ்க் நிறுவனத்தின் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது.
படித்த அதிகமான இளைஞர், யுவதிகள் அரசாங்கத் தொழில் வாய்ப்பினையே அதிகம் எதிர்பார்க்கின்றனர். அரச தொழில்களில் திறன் அபிவிருத்தியின்றி மிக இலகுவாக தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதே இதற்கு பிரதான காரணம்.
இதேவேளை, நாட்டில் அதிகமான தொழில் வாய்ப்புகள் உள்ள போதிலும் தொழில் சந்தைக்கான திறன் அபிவிருத்தியுடன் கூடிய கல்வியை அதிகமான இளைஞர், யுவதிகள் தேடிக்கொள்ளாமையே இலங்கையின் தொழில் வாய்ப்பு பிரச்சினைக்கு காரணமாக உள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் மீன்பிடி, உல்லாசத்துறை, விவசாயம் மற்றும் கைத்தொழில் ஆகிய துறைகளில் அதிகமான வருமானங்களை ஈட்டக் கூடிய வசதி வாயப்புகள் உள்ள போதிலும் வறுமை நிலையைக் காட்டி 5,170 குடும்பங்கள் இன்னும் சமுர்த்தி நிவாரணங்களைப் பெற்று வருகின்றமை கவலைகுரியது என்றார்.
அறுகம்பை உல்லாசத்துறை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ. றஹீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வூட்ஸ் நிறுவனத்தின் குழுத் தலைவர் எம்.யோகஸ்வரன், பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் உல்லாசத்துறை ஹொட்டல் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago