Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 04 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
தனியார் பஸ்களில் பயணம் செய்யக்கூடிய வகையில் இலவச பிரயாண அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாத அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் 07 பேருக்கு இவ்வாரத்துக்குள் அவ்வட்டைகள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
இந்த இலவச பிரயாண அனுமதிக்காக இந்த மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்திருந்த ஊடகவியலாளர்களுக்கு கடந்த 04 வருடங்களுக்குள் முன்னர் இந்த இலவச போக்குவரத்து அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும், விண்ணப்பித்திருந்த சில ஊடகவியலாளர்களுக்கு இதுவரையில் இலவச பிரயாண அனுமதி அட்டைகள் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதைத்; தொடர்ந்து, மேற்படி 07 ஊடகவியலாளர்களுக்கும் இலவச பிரயாண அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் சுமார் 40 பேர் இலவச பிரயாண அனுமதி அட்டைகளைப் பெற்றுள்ளனர். இந்த இலவச பிரயாண அனுமதி அட்டைகளைப் பெற்றுக்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களுக்கும் தனியார் பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago