2025 மே 22, வியாழக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Thipaan   / 2016 ஜனவரி 23 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ  பிரதி அமைச்சர் பைசால் காசிமின் வேண்டுகோளுக்கினங்க,' ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள் ' நிறுவனத்தின் ஏற்பாட்டில், கொழும்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன், எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 28ஆம் திகதி வியாழக்கிழமை வரை மாபெரும் இலவச மருத்துவ முகாம் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் நடைபெறவுள்ளது.

இதற்கமைய ஜனவரி 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை நிந்தவூர் மதீனா  வித்தியாலயத்திலும், 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை அட்டளைச்சேனை அறபா வித்தியாலயத்திலும், 27ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்திலும், 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மகாஓய பிரஜா சலாக மண்டபத்திலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள இம்மருத்துவ முகாமுக்கு பிரதி அமைச்சர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு இலவச வைத்திய முகாமினை ஆரம்பம் செய்து வைக்கவுள்ளனர்.

நடைபெறவிருக்கும் மருத்துவ முகாமுக்கு வெளிநாட்டில் இருந்து வைத்திய குழுவினர்கள் வருகைதரவுள்ளதுடன் இலங்கை சுகாதார அமைச்சின் வைத்திய குழுவினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனவே இவ்விலவச வைத்திய முகாமுக்கு சகல மக்களும் கலந்து முழு பயன்களையும் பெற்றுக்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் பைசால் காசிம் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X