Freelancer / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (10) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், காணாமல் போன பெண்ணை மூதூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அழைத்து சென்ற நபர் கல்முனை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஐஸ் கிரீம் வியாபாரம் செய்பவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அன்றைய தினம் குறித்த நபரால் அழைத்துச் செல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தாயாரான இப்பெண் இன்னும் வீடு வரவில்லை என்பதுடன் இப்பெண் தொடர்பில் ஏதாவது அறிந்திருந்தால் உடனடியாக கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்க்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. R
தொலைபேசி இலக்கம் - 0767824592, 0753251281

2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago