2025 மே 22, வியாழக்கிழமை

ஈமானிய எழுச்சி மாநாடு நாளை

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை பிராந்திய ஈமானிய எழுச்சி மாநாடு நாளை; சனிக்கிழமை (30), மருதமுனை அக்பர் ஜூம்ஆப் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர் றாபிதது அஹ்ஸின் ஸூன்னா நிருவாகத்தின் அம்பாறை பிராந்தியக் கிளையின் செயலாளர் இன்று (28) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அல்குர்ஆன், அஸ்ஸூன்னா ஒளியில் அகீதா, மன்ஹஜ், அஹ்லாக், குடும்ப வாழ்வு பற்றி சரியான அறிவூட்டி, சமூகக் கொடுமைகளைக்களையும் வழிகாட்டி, ஈமானிய விழிப்பூட்டும் ஈமானிய எழுச்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை (30) மாலை 3.30 ஆரம்பிக்கப்பட்டு இரவு 9.30 வரை இடம்பெறவுள்ளது.

இதில் ஈமானிய எழுச்சியை நோக்கிய பயணம், அல் குர்ஆன் சுன்னாவை அணுகும் முறை, பிழையாகப் புரிந்துகொள்ளப்படும் தவ்ஹீத் கலிமா, சீதனக் கொடுமையும் அதனை ஒழிக்கும் வழிமுறையும், இல்லற வாழ்வு நல்லறமாதல் என்ற தலைப்புக்களில் பிரபல உலமாக்கள் மூலம் விளக்கவுரை நிகழ்த்தப்படவுள்ளது.

அல்குர்ஆன், அஸ்ஸூன்னாவை அடிப்படையாகக் கொண்டே இவைகள் யாவும் இடம்பெறவுள்ளது. இதில் அம்பாறை மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X