2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மூன்று உணவகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன், இன்று வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.
 
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சுகாதார அதிகாரிகளும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் நேற்று வியாழக்கிழமை (05) உணவகங்கள் மற்றம் பேக்கரிகள் போன்றவற்றில் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது நுகர்வுக்கு பொருத்தமில்லாமலும், உணவுச் சுகாதாரம் பேணப்பாடாமலும், கழிவுகளை ஒழுங்கான முறையிலும் அகற்றப்படாலும் காணப்பட்ட 03 உணவகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
இவ் உணவகங்களின் ஊரிமையாளர்கள் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வந்தன. இதனை கருத்தில் கொள்ளாது அலச்சியப் போக்குடன் இருந்துவந்தனர்.
 
இத் திடீர் சுற்றி வளைப்பின் போது நுகர்வுக்கு பொருத்தமில்லாது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாண், பனிஸ் மற்றும் கேக் வகைகள் உட்பட பேக்கரி உணவுப் பண்டங்களை கைப்பற்றி அழித்தொழித்துள்ளாதாகவும் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் மேலும் தெரிவித்தார்.
 
மேற்படி மூன்று உணவகங்களுக்கெதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
 
இது போன்ற திடீர் சுற்றி வளைப்புகள் எதிர்வரும் நாட்களில் மேலும் தொடருமெனவும், பொருத்தமில்லாமலும், உணவுச் சுகாதாரம் பேணப்பாடாமலும், கழிவுகளை ஒழுங்கான முறையிலும் அகற்றப்படாமலும் காணப்பட்டும் உணவுச் சாலைகளின் உரிமையாளர்களுக்கெதிராக உணவு கட்டளை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X