Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (10) உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆரம்பத்தில் பாடசாலை நேரத்தில் 13 தொடக்கம் 22 வரையான மாணவர்களே சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், பெரும்பாலானோர் வீடு திரும்பியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், பாடசாலை கலைந்த பின்னர் வீடுகளுக்குச் சென்றிருந்த மேலும் 38 இற்கு மேற்பட்ட மாணவர்கள் மாலை நேரத்திலும் இரவு வேளையிலும் திடீரென நோய்வாய்ப்பட்டு, அரசாங்க வைத்தியசாலைகளிலும் தனியார் மருத்துவ நிலையங்களிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். இத்தகவலை வைத்தியசாலை வட்டாரங்களும் பெற்றோரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் மொத்தம் 48 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களுள் 24 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றதாகவும் மற்ற 24 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளதாகவும் பாடசாலை அதிபர் எம்.ஐ.இல்யாஸ் தெரிவித்தார்.
இப்பாடசாலையில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய இடைவேளையின்போது உணவுப் பண்டங்களை வாங்கி உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு வயிற்று வலி மற்றும் வாந்தி போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் இந்த உணவினால்தான் இவர்கள் பாதிக்கப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதாக அதிபர் குறிப்பிட்டார்.
இவர்கள் உட்கொண்டதாக கூறப்படுகின்ற நூடுல்ஸ், உளுந்து வடை, சம்பல் போன்ற உணவுப் பண்டங்களின் மாதிரிகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் பெறப்பட்டு, கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று பாடசாலைக்கு மாணவர் வரவு குறைவாக இருந்தபோதிலும் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர் என்றும் அதிபர் எம்.ஐ.இல்யாஸ் சுட்டிக்காட்டினார். இச்சம்பவம் தொடர்பில் கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகளும் பாடசாலைக்கு வருகைதந்து ஆராய்ந்துள்ளனர் எனவும் பொலிஸ் விசாரணைகள் இடம்பெறவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago